தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாவட்ட கைப்பந்து (Handball) சாம்பியன்ஷிப் போட்டி 2025–26 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வல்லநாடு பகுதியில் அமைந்துள்ள சாரா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாவட்ட கைப்பந்து போட்டியை சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளரும், சாரா ஜூவல்லரி உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஹாஜி எம்.கே.எம். முகமது நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் நாள் நிகழ்வில் வல்லநாடு காவல்துறை ஆய்வாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து சிறப்பித்தார்.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் பொறியாளர் அப்துல் வதூத், B.E., வரவேற்றார். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொருளாளர் ரம்யா, துணைச் செயலாளர் இன்பா சதீஷ்குமார், சங்க பொறுப்பாளர் ஸ்வேதா, சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் திருமதி உமா மகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ், சங்க உறுப்பினர்களான சாக்கேஷ், ஐயப்பன் அலீம், முத்துப்பாண்டி, ஆதில் மற்றும் நடுவர்கள் விழுப்புரம் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களையும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் செயலாளர் திரு. பாரத், B.E., NIS அவர்கள் வாழ்த்தி பேசினார்.
போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வில் எஸ். எல். பெருமாள், M.Tech (Indian Air Force – Retd), திரு. பழனிச்சாமி, B.A. (Secretary, Tamil Nadu Master Athletic Association) மற்றும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் Dr. Syed Ali ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாகுல் ஹமீத் (முதல்வர், Melapalayam Muslim HR. Sec. School) வாழ்த்தி பாராட்டினார்.
போட்டியின் வெற்றியாளர்கள்:
Sub-Junior Boys: சாரா மெட்ரிகுலேஷன் பள்ளி
Junior Boys: St. Joseph’s CBSE School
Junior Girls: St. Lucia School, குரும்பூர்
இந்த மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்தும் சிறந்த மேடையாக அமைந்தது என அனைவரும் பாராட்டினர்.