தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம் தூய சவோியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சவோியாபுரம், விவேகானந்தநகர், சுடலையாபுரம், காமராஜபுரம், எம்.ஜி.ஆர்.நகர் குடிசை மாற்றுவாரியம், ராம்தாஸ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இம்முகாமில் 15 அரசு துறைகளின் கீழ் 43 வகையான பயன்பாடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முகாமில் கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுடன் நேரடியாக உரையாடினார். பின்னர் மனு அளித்த மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக அட்டை பெயர் திருத்தம் தொடர்பான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோட் மகாராஜா, பானு, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய அவைத் தலைவர் ஜோதிடா்முருகன், துணை செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமோனி, கிளைச் செயலாளர்கள் ராயப்பன், அம்புரோஸ், பங்குதந்தை குழந்தைராஜன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கப்பிக்குளம்பு ஆபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பதன் மூலம் இம்முகாம் சிறப்பாக நிறைவடைந்தது.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொதுமக்களுக்கு சேவைகள், மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கிய எம்.எல்.ஏ சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகரில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
அடுத்த
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026