தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தொடர்ந்து 103 ஆண்டுகளாக இலாபம் ஈட்டி வரும் பாரம்பரியமிக்க தனியார் வங்கியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வங்கியின் 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை, 27.10.2025 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் அவர்கள் கூறியதாவது:
“இந்த காலாண்டில் வங்கி தனது வரலாற்றிலேயே அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடன் மற்றும் வைப்பு வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வலுவான risk management ஆகியவை எங்கள் வெற்றியின் முக்கிய காரணிகள். மேலும், 9 புதிய கிளைகள் திறந்து எங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம்” என்றார்.
வங்கி வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள் (Year on Year):
மொத்த வணிகம் ₹91,875 கோடியில் இருந்து ₹1,02,351 கோடியாக உயர்ந்து 11.40% வளர்ச்சி
மொத்த வைப்புகள் ₹49,342 கோடியில் இருந்து ₹55,421 கோடியாக உயர்ந்து 12.32% வளர்ச்சி
கடன் தொகை ₹42,533 கோடியில் இருந்து ₹46,930 கோடியாக உயர்ந்து 10.34% வளர்ச்சி
CASA தொகை ₹13,873 கோடியில் இருந்து ₹15,163 கோடியாக உயர்ந்து 9.30% வளர்ச்சி
Retail, Agri & MSME (RAM) தொகை ₹39,277 கோடியில் இருந்து ₹44,392 கோடியாக உயர்ந்து 13.02% வளர்ச்சி
நிகர லாபம் ₹303 கோடியில் இருந்து ₹318 கோடியாக உயர்ந்து 4.95% வளர்ச்சி
மொத்த வராக்கடன் விகிதம் (GNPA) 1.37% இலிருந்து 1.01% ஆகக் குறைந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த நிலை.
நிகர வராக்கடன் விகிதம் (NNPA) 0.46% இலிருந்து 0.26% ஆகக் குறைந்தது.
CRAR 29.59% இலிருந்து 30.96% ஆக உயர்ந்தது.
பங்கின் புத்தக மதிப்பு ₹532.37 இலிருந்து ₹596.38 ஆக உயர்ந்தது.
நிகரமதிப்பு (Networth) ₹8,430 கோடியில் இருந்து ₹9,444 கோடியாக உயர்ந்தது.
புதிய கிளைகள் மற்றும் விரிவாக்கம்:
இக்காலாண்டில் வங்கி 9 புதிய கிளைகளை துவக்கியது. அதில் ஆந்திரப் பிரதேசம் (தெனாலி, மங்களகிரி) மற்றும் கேரளா (விழிஞ்சம்) ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட கிளைகள் குறிப்பிடத்தக்கவை.
விழிஞ்சம் கிளை வங்கியின் 600வது கிளையாகும், இது வங்கியின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்:
RuPay டெபிட் கார்டுகளுக்கான “TMB Rewards” திட்டம் அறிமுகம்.
RuPay கிரெடிட் கார்டுகளில் UPI வசதி அறிமுகம்.
Oracle Fusion CX Platform மற்றும் Vendor Management System (VMS) நடைமுறைப்படுத்தப்பட்டது.
Canara Robeco Asset Management Company Ltd. உடன் முதலீட்டு சேவை கூட்டாண்மை.
AI அடிப்படையிலான புதிய கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவை மேம்பாடு.
சென்னை காமராஜர் துறைமுகம் மற்றும் சுங்கக் கட்டண வசதிகள் இணைய வங்கியின் மூலம் அறிமுகம்.
Bajaj Allianz General Insurance நிறுவனத்துடன் காப்பீட்டு விநியோக கூட்டாண்மை.
Wegofin Digital Solutions Pvt. Ltd. உடன் Bank as Payment Aggregator (BAPA) மாதிரியில் இணைப்பு.
தானியங்கி பரிவர்த்தனை ஒப்பீட்டு செயல்முறை அறிமுகம் செய்து, துல்லியத்தையும் வேகத்தையும் மேம்படுத்தியது.
இந்த முயற்சிகள் வங்கியின் புதுமை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து, வலுவான நிதி அடித்தளத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் உருவாக்கி, இந்திய வங்கி துறையில் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக திகழ்கிறது.
தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி – 103 ஆண்டுகளின் இலாபப் பயணத்தில் புதிய மைல்கல்: இரண்டாம் காலாண்டில் சாதனை நிகர லாபம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீவைகுண்டத்தில் நவம்பர் 2ம் தேதி பாஜக மாபெரும் பூத் கமிட்டி மாநாடு!
அடுத்த
காரப்பேட்டை நாடார் பள்ளியில் அதிர்வலையம்: தேர்தல் அரசியலில் சிக்கிய ஆசிரியர்கள் – செயலாளர் ரமேஷ் மீது பொய்க்குற்றச்சாட்டு என விளக்கம்!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026