தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று சில மணி நேரங்களிலேயே போலீசாரால் தீர்க்கப்பட்டது.
கோவில் நிர்வாகியான இசக்கிபாண்டி (46) நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை திறந்து பார்க்கும்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது கவனத்திற்குவந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (19) என்பவரே உண்டியலை உடைத்து பணத்தை திருடியமை கண்டறியப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட ரூபாய் 10,000 பணத்தையும் மீட்டனர்.
கோவில் உண்டியல் உடைப்பு வழக்கை குறுகிய நேரத்தில் நளினமாகத் தீர்த்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
கோவில் உண்டியல் உடைப்பு : இரவில் நடந்த திருட்டு, பகலே போலீஸின் கையில் சிக்கிய இளைஞர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்ட நாடார் சமுதாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026