தூத்துக்குடி மாநகரம் அய்யர்விளை பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார்.
அங்கு பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த கழிவு மற்றும் மணழிவு அடைப்புகள் காரணமாக நீர் வெளியேற்றம் தடைபட்டிருந்ததை ஆய்வு செய்த அமைச்சர், உடனடியாக அதிகாரிகளுக்கு தேவையான உபகரணங்களை பயன்படுத்தி அடைப்புகளை அகற்றி, நீர் வெளியேற்ற பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிகால் செயல்பாடு மீண்டும் சீர்படுத்தப்படத் தொடங்கியது.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் உள்ளிட்டோர் அமைச்சருடன் இணைந்து நிலைமையை கண்காணித்தனர்.
மழை காரணமாக சிரமத்தில் இருந்த பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அய்யர்விளை வெள்ளப்பெருக்கு – அமைச்சர் கீதாஜீவன் துரித நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முனைவர் மா. சங்கருக்கு மத்திய அரசின் கலைப் பாராட்டு விருது — “ஒற்றுமைக்கான நடை” நிகழ்ச்சியில் சகா கலைக்குழுவும் கௌரவிப்பு!!
அடுத்த
தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்: திருவைகுண்டம் அணைக்கட்டு நிலைமையை நேரில் மதிப்பீடு செய்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026