தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் ஏற்பாட்டில், தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று இரவு தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்து இரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாட்டமானது தொடங்கியது.
பின்னர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆண்கள், பெண்களுக்கான மராத்தான் போட்டி நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பின்னர் சிவன் கோவிலில் மாவட்ட வர்த்தக அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி, மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கையோடு தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட அலுவலகத்தில் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் 1051 பேர் பயன் பெறும் வகையில் மாபெரும் கறி விருந்து அன்னா தானம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் சிதம்பர நகர் மெயின் ரோட்டில் தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர்., ஏற்பாட்டில், தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி, மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களுக்கு தையல் மிஷின்கள், சேலைகள், மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் ஏற்பாட்டில் 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று இரவு தொடங்கி இன்று இரவு நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், கிருஷ்ண மூர்த்தி, கிஷோர், கோல்டன், ஆனந்த், சிவா, சதீஷ், ஜெகன், ஜனோஜ், சதீஷ், செல்வம், மீனாட்சி சுந்தரம், கணேஷ், முருகன், செந்தில்குமார், விஜய் சுபாகர் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் ஏற்பாட்டில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று தொடங்கி! இன்று நிறைவு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் கூட்டுடன்காடு அய்யனார்குளம் பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி கிருஷ்ண மூர்த்தி ஏற்பாட்டில் தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026