நாகரிகம் இன்றி பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்ட இந்தியாவின் ஒரே இயக்கம் எங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெண்களின் பாதுகாப்பில் தமிழக வெற்றிக் கழகம் என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை கூட மாநாட்டில் பொது வெளியிலேயே அறிவித்தவர். எங்கள் வெற்றித்தலைவர் தளபதியார் எங்கள் வெற்றித் தலைவர் தளபதியார் இன்று தமிழகத்தில் ஒவ்வொரு பெண்களுக்கு அண்ணனாய், தம்பியாய், தோழனாய், நட்பாய், தங்கள் வீட்டில் ஒருவராய் தான் பார்த்து வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை,
ஆனால், இதெல்லாம் ஒன்றும் புரிந்தும் புரியாமல், அறிந்தும் அறியாமல், பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் வகையில், பெண் குலத்திற்கே மிகுந்த அவமரியாதையை தாங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள். தங்களை உயர்த்திய தமிழ்மக்களையும் தரக்குறைவான வார்த்தைகளால், பேசியுள்ளதைக் கண்டு, பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், எங்கள் வெற்றித் தளபதியார் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த, சூழ்ச்சியாளர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்ய நினைக்கும் உங்கள் தீய எண்ணங்கள் என்றும் ஈடேறாது. உங்கள் சூழ்ச்சி அரசியல்களைக் கண்டு, எங்கள் தமிழ் சமூகம் பின் வாங்காது.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் முகத்திரையுடன், உங்களைப் போன்ற சூழ்ச்சியாளர்களின் முகத்திரையையும், எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் கிழித்தெறிந்து உங்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். என்றும் உங்கள் பேட்சு எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்ச்சை பேச்சுக்கு தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கடும் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காலி மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் நூதனமான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடத்தை புதுப்பிப்பதற்காக 8 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் சரமாரி குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026