தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி சிலை மற்றும் ஆஷ் மெமோரியல் சந்திப்புகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோபுரங்களின் மின்சார இணைப்பு, விளக்குகளின் ஒளிர்வு, பொது மக்களுக்கு ஏற்படும் வசதி ஆகிய அனைத்தையும் மேயர் ஆராய்ந்து, அதிகாரிகளிடம் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்பணிகள் நிறைவு பெற்றதன் மூலம் தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகள் இரவு நேரங்களில் பிரகாசமடைந்து, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சந்திப்புகள் பளபளக்கும் புதிய ஒளியில் — நகரின் அழகை கூட்டும் உயர் மின் விளக்கு கோபுரங்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வேல் வேல் முருகா! – தூத்துக்குடியில் கந்த சஷ்டி முன்னிட்டு 108 பால்குடம் பவனி உற்சாகம்”
அடுத்த
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026