தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 2ம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதை, விளையாட்டு வசதிகள், பசுமை வளர்ப்பு, விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.
ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் பல கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மக்கள் ஓய்வெடுத்து சுகமாகச் செலவிடக்கூடிய பசுமை பூங்காவாக தெப்பக்குளம் மாறும் நாள் தூரத்தில் இல்லை என மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெப்பக்குளம் சுற்று பூங்கா பணிகள் வேகமாக முன்னேறுகின்றன – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்!!
அடுத்த
திருமந்திரநகரில் சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் பவுர்ணமி திருவிழா – திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026