தமிழக 2025 - 2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திருச்சியில் திறக்கப்பட இருக்கும் ரூ. 290 கோடி மதிப்புள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனை இன்று ( 05.04.2025) மாலை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து சமக சார்பில் முதல்வருக்கு எங்களது வாழ்த்துக்களையும், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் கண்டி வேல், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அந்தோணி பிச்சை, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாய ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்துச் செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர அவைத் தலைவர் மதியழகன், மாநகர செயலாளர் உதய சூரியன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், நாடார் பேரவை மாவட்ட மகளிரணி தலைவி, சந்திரா மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து முதல்வருக்கு நன்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் புத்தொழில் களம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் இருந்து புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026