தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு மாநகராட்சி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் பதாகையை உடனடியாக அப்புறப்படுத் துவதுடன், நீதிமன்ற வாசலை அரசியல் நிகழ்வுகளுக்கான மேடையாக பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு மாநகராட்சி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும். நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயலாபத்திற்காகவும் பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீதிமன்ற வாசலை அரசியல் மேடையாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.