தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை மக்கள் தாமே சரிபார்க்கலாம் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
பதிவேற்ற நிலையை அறிய:
1. voters.eci.gov.in/login இணையதளத்தை அணுகவும்
2. “Fill Enumeration Form” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
3. மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, Epic Number-ஐ பதிவிடவும்
சமர்ப்பிக்கப்பட்ட விவரம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் “Submitted” எனத் தோன்றும். “ஆதார் படிவத்தை சப்மிட் செய்யவும்” எனத் தொடர்ந்து காட்டினால், BLO இன்னும் உங்கள் மனுவை பதிவேற்றவில்லை என்பதைக் குறிக்கும் என்று மேயர் விளக்கினார்.
இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்படாத மனுக்கள் இருந்தால், மாநகராட்சி மத்திய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் நடைபெறும் தீவிர திருத்த முகாம்களில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு மக்கள் மேயர் வெளியிட்ட சமூக வலைதள இணைப்பை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் — பதிவேற்ற நிலை ஆன்லைனில் சரிபார்க்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொள்வது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தஞ்சாவூர் குப்பை பயோமைனிங் ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு! — முன்னாள் கமிஷனர், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026