திருச்சிராப்பள்ளி, நவம்பர் 10:
முதியோரின் நலனையும், சமூக உறவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் “அன்புச் சோலை” திட்டம் மாநில அளவில் துவங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பானை பவுண்டேஷன் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதியோருக்கான மனமகிழ் வள மையங்களாக இயங்கவுள்ள “அன்புச் சோலை” மையங்களில் யோகா, புத்தக வாசிப்பு, திறன் மேம்பாடு, மருத்துவ ஆலோசனை, பொழுதுபோக்கு போன்ற சேவைகள் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் மனநலம், உடல்நலம், சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்திரசேகரன் நகரிலும் இன்று காணொளி காட்சி வழியாக திட்டம் துவங்கியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அன்புச் சோலை மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
முதியோரின் மனநலனையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட “அன்புச் சோலை” திட்டம், மக்கள் நலனை முன்னிருப்பில் வைத்து செயல்படும் தமிழ்நாடு அரசின் புதிய முன்னேற்ற முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“அன்புச் சோலை” திட்டம் மாநிலளவில் துவக்கம் — முதியோரின் வாழ்வில் புதிய ஒளிக்கதிர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட ஒட்டப்பிடாரம் பகுதி தமிழர்களுக்கு அரசு உதவிக்கரம் – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026