ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில், “என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” என்ற முழக்கத்துடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் ஓணமாக்குளம் வாக்குச்சாவடி எண் 1 மற்றும் 2, வி.பி. தாழையூத்து வாக்குச்சாவடி எண் 3 ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பது குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், திராவிட மாடல் அரசின் முக்கிய சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி, மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராகுல், இளைஞரணி நிர்வாகிகள் மாரியப்பன், முத்துசெல்வன், கிளை செயலாளர்கள் அறிவழகன், மூர்த்தி உள்ளிட்டோர், பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்ற உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் மைய நோக்கமாக இருந்தது.
தூத்துக்குடி
“என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” – ஒட்டப்பிடாரம் மேற்குப் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயமே நாட்டின் உயிர்நாடி – 90 நாட்கள் விற்பனை கண்காட்சி துவக்கத்தில் மேயர் ஜெகன் உரை!!
அடுத்த
உடல்நலம் விசாரித்த எம்எல்ஏ: புதூர் பேரூர் கழகச் செயலாளரை நேரில் சந்தித்த மார்கண்டேயன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026