தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் வெளியீடு மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில், கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், உறுப்பினர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பிரஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன் மற்றும் உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்களுக்கும், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கும் தூத்துக்குடி பிரஸ் கிளப் 2026 டைரி மற்றும் காலண்டரை பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மரியாதையாக வழங்கினர்.
இந்த சந்திப்பின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், பெருமாள்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.