இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வகையான விளையாட்டு உபகரணங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் 30.12.2025 அன்று ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தருவை மைதானம் உள்அரங்கில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைப்பில் சிறப்பான விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் ஆத்தூர், சாயர்புரம், தென் திருப்பேரை, நாசரேத் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், ஃபுட்பால், இறகு பந்து, கேரம், ஸ்கிப்பிங், சிலம்பம், சதுரங்கம், எரிபந்து, ஜிம்னாஸ்டிக், வெயிட் லிப்ட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தேவையான 30 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசு விளையாட்டு துறைக்கு வழங்கி வரும் முன்னுரிமையை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் விளையாட்டில் சாதித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜ், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் ராஜசேகரன், ராஜபாண்டி, கோவில்பட்டி ஹரி கணேஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர் டென்சிங், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.