தூத்துக்குடி நகரத்தில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்து, பிள்ளைகளோடு சிறிது நேரம் மகிழ்ச்சியாக கழித்து, நிம்மதியாக தூங்க நினைக்கும் பெற்றோர்கள் கூட கொசு தொல்லையால் இரவெல்லாம் விழித்திருக்க நேரிடுகிறது.
“இந்த கொசு தொல்லையால் எங்கள் தூக்கம் போய்விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். மறுநாள் வேலைக்கு செல்ல உடல் சக்தியே இல்லாமல் போகிறது,” என பலர் வலியுறுத்துகின்றனர்.
பிரையன்ட் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், மாநகராட்சி உடனடியாக கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மாநகராட்சி அதிகாரிகள் கொசு மருந்து தெளிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என பொதமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியிடம் தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது — “ஒரு நிம்மதியான தூக்கம்!”
தூத்துக்குடி
“தூக்கம் போச்சு… கொசு தாண்டவம் தொடர் பிரச்சினை!” — தூத்துக்குடி மக்களின் ஏக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளைக்கு ஆட்சியரின் பாராட்டு!
அடுத்த
தூத்துக்குடி மாநகரில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கொசு மருந்து தெளிக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026