தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் அரசு மருத்துவமணைகளில் இரத்ததான முகாம்களை நடத்தி, அதிக இரத்ததானம் செய்த சமூக அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்குவது வழக்கமாகும்.
அதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டு அதிகமான இரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்து, நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு நம்பிக்கை அளித்த “மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை” குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. இதனை மதித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு இளம்பகவத், I.A.S. அவர்கள் அறக்கட்டளைக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அறக்கட்டளை சார்பில் திரு. ஸ்டாலின் அவர்கள் சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவமணை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார் அவர்கள் உடனிருந்தார்.
இரத்தம் தானம் செய்து உயிர்களை காப்பாற்றும் பணியில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்பு காட்டி வரும் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சமூக நலனில் முன்னிலை வகிப்பதை மாவட்ட நிர்வாகம் பாராட்டியது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளைக்கு ஆட்சியரின் பாராட்டு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகையா எம்எல்ஏ ஆய்வு – மாணவர்களின் நலனில் அக்கறை, திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து!!
அடுத்த
“தூக்கம் போச்சு… கொசு தாண்டவம் தொடர் பிரச்சினை!” — தூத்துக்குடி மக்களின் ஏக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026