தூத்துக்குடியில் வி.கே. சசிகலா ஆதரவாளர்கள் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.



தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



அனைத்திந்திய புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்கள் உரிமைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர் களாக செயல்பட்டு வந்த, மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலை செல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர். கணேசன், கணேசன் உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகினர்.



இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு வீரவாள் வழங்கி, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா மற்றும் ராஜு, பாலஜெயம், சாம்ராஜ் சகாயராஜ், சொக்கலிங்கம், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.