உலக இதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் இருதய நலத்துறையான இதயாலயா இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி “The Heart Centre” சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவமனையின் முதல்வர் Dr. S. அருள்ராஜ் மற்றும் இதயம் நல நிபுணர் Dr. T. நீலாம்புஜன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரு. பொன்சீலன், Managing Director, SDR Group of Companies, Tuticorin, அவர்களும், Rtn. அபு தாமஸ், Past Assistant Governor, Rotary Club of Pearl City, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்திய மருத்துவர் சங்கம் தூத்துக்குடி கிளையின் தலைவர் Dr. R. சரவணன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் Holy Cross Home Science கல்லூரியின் உதவி பேராசிரியர் திருமதி. மாரி தங்கம் அவர்கள் உணவுமுறை மாற்றமும், வாழ்க்கை முறையிலும் நல்ல பழக்க வழக்கங்களின் அவசியத்தை எடுத்துரைத்தார். Dr. நீலாம்புஜன் அவர்கள் “இளம் வயது மாரடைப்பு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்காக ஆரோக்கிய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. விழிப்புணர்வு போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியை சேர்ந்த சமார் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான இலவச இருதய மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. இதில் எக்கோ ஈசிஜி இரத்த சர்க்கரை மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்ணீர் அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026