தூத்துக்குடி பாத்திமாநகர் பங்கு சிலுவையா ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை மாலை திருக்கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இதையொட்டி ஜெபமாலை பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை முதல்வர் அருட்பணி விஜயன் அடிகளார் தலைமை வகித்தார். திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.



தொடர்ந்து, சிலுவையா ஆலயப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை 12.09.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனையுடன் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி பிரதீப் அடிகளார் தலைமை வகிக்கிறார். மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் வழங்கப்படுகிறது. 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி வளன் அடிகளார் தலைமை வகிக்கிறார்.



மேலும், 13-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஊர் சமபந்தி அசன விருந்து நடைபெறுகிறது. பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 14.09.2026 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நன்றித் திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு பாத்திமாநகர் பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி சார்லஸ் அடிகளார் தலைமை வகிக்கிறார். உதவி பங்குத்தந்தை அருட்பணி ஜெரி அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.



சிலுவையா கோவில் திருவிழாவின் கொடியேற்றம், மாலை ஆராதனை மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் OLFTuticorin யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.



திருவிழா நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆசீரைப் பெற்று செல்லுமாறு பாத்திமாநகர் ஊர் நலக் கமிட்டியினர், சிலுவையா கோவில் நிர்வாகக் குழுவினர், பாத்திமாநகர் பங்கு இறைமக்கள் மற்றும் திருஇருதய அருட்சகோதரிகள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.