தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் விளைவாக தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தீவிரமடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பதை தொடர்ந்து கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து 1,000 கனஅடி நீர் உப்பாத்து ஓடைக்குள் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் தரைப்பாலம் முழுவதும் வெள்ளநீரில் மூழ்கி, போக்குவரத்து தடம் புரண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., ஏரல் தரைப்பாலம் பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமையை ஆய்வு செய்தார். வெள்ளநீர் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆய்ந்து, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுக்கான பயணத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
வெள்ளநீர் சூழ்ந்த ஏரல் தரைப்பாலம்: பாதிப்பை நேரில் மதிப்பீடு செய்த எம்.பி. கனிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்: திருவைகுண்டம் அணைக்கட்டு நிலைமையை நேரில் மதிப்பீடு செய்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
அடுத்த
தூத்துக்குடி வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! ஆத்தூர்–முக்காணி சந்திப்பில் நிலைமையை நேரில் கண்காணித்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026