தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பதிவாகியுள்ள கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்–முக்காணி சந்திப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரைப்பாலம் அருகே நீர்மட்டம் மற்றும் நீரேற்ற நிலைமை குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல் அறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் இந்நேரில் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! ஆத்தூர்–முக்காணி சந்திப்பில் நிலைமையை நேரில் கண்காணித்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ளநீர் சூழ்ந்த ஏரல் தரைப்பாலம்: பாதிப்பை நேரில் மதிப்பீடு செய்த எம்.பி. கனிமொழி!!
அடுத்த
“KKM கல்குவாரி காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட கிராமச் சாலைகள் நாசம் – மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மக்கள் நல இயக்கத் தலைவர் சாமு காந்தி மனு”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026