தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிராமிய பாடல், புலி ஆட்டம், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு ‘கலை சார்ந்த விழிப்புணர்வும் கலைவழிக் கல்வியும்’ என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் முனைவர் சகா மா. சங்கர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளின் சிறப்புகள், அவற்றின் சமூகப் பங்களிப்பு மற்றும் கலைவழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். மேலும், கலைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு கலை ஆளுமையை மேம்படுத்தும் பயிற்சி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.



நிகழ்வை கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சூர்யகலா மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ப. லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், அரசு இசைப்பள்ளியில் நடைபெறும் நாட்டுப்புறக் கலை வகுப்புகளில் சேர்வதற்கான விண்ணப் பங்களையும் பெற்றுக் கொண்டனர்.



“கலைவழி மனிதநேயம் காப்போம்; கிராமியக் கலைகளை வளர்ப்போம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர் களிடையே நாட்டுப்புறக் கலைகள் குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.