அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து பழைய மாநகராட்சி முன்பாக மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து, 2026ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தாமணி, பொருளாளர் சேவியர், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் எரோமியாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, சந்தனப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள், ஜெ. பேரவை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், மன்ற நிர்வாகிகள், பெண்கள் அணி நிர்வாகிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை வணக்க நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலையில் சுதந்திரம்…? மாநகராட்சியின் ‘பிரேக்’ – ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்!
அடுத்த
“இரண்டாம் கேட்–ஒன்றாம் கேட் இணையும் இடங்களில் புதிய தோற்றம்… மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026