காந்திஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்தும் கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



முகாமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் K. பெருமாள்சாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி மற்றும் நகரத் தலைவர் அருண் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.



முகாமில் முதன்மை முகாம் மேலாளர் ஆசைமாணிக்கம், மருத்துவர் விழி ஆய்வாளர் சிஞ்சு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். மேலும், காந்தியின் உருவப்படத்தை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜாராம் திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் வேணுகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி, INTUC மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாவட்டத் துணைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மேலும், கழுகுமலை சங்கர், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜான் பிரிட்டோ, தங்கபாண்டி, தொகுதித் தலைவர் ராமச்சந்திரன், பாலகுமார், மாரியப்பன் (EB), பழனிச்சாமி, விஜயராஜ், பிரபாகரன், தர்மர் பேரையா, முத்து விஜயா, கிருபாகரன், முத்துகுமாரவேல், சண்முகவேல், ஆசாரி மாரிமுத்து, கருப்பசாமி, ஆர்தர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.