தூத்துக்குடி போல்பேட்டை போத்தி விநாயகர் திருக் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி மற்றும் வருஷாபிஷேக விழாவை யொட்டி நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இதனைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் நிர்வாகத்தை வழிநடத்திய முன்னாள் தர்மகர்த்தரும், எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான பெரியசாமி திடலில் நடைபெற்ற விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்ற சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. இதனை கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கர், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம் மற்றும் இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் ஜோஸ்பர், லிங்கராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, மணி, மாநில வஉசி பேரவை தலைவர் கீதா செல்வமாரியப்பன், பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.