திமுக தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அரசியல் களத்தில் இருந்து ஒதுங்காமல் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து மக்கள் பணியாற்றி வருகிறார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன்.



தூத்துக்குடி திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தீவிர விசுவாசியுமான பெரியசாமி, சுமார் 30 ஆண்டுகள் ஒருங் கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றியவர். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பின ராகவும், ஒருமுறை நகர்மன்றத் தலைவராகவும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், துறைமுக சபை பொறுப்புக்குழு உறுப்பின ராகவும், தொழிற் சங்கத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.



1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆசிரியராக பணியாற்றி வந்த கீதாஜீவனை மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடச் செய்தார் பெரியசாமி. தேர்தலில் வெற்றி பெற்ற கீதாஜீவன், பின்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கான விருதையும் அப்போதைய பிரதமரிடம் பெற்றார்.



இதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.



2016-ம் ஆண்டு மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார். தந்தை பெரியசாமி மறைவுக்குப் பின்னர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பை ஏற்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார்.



பொது வாழ்வில் சுமார் 30 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் கீதாஜீவன், தனது தந்தை பெரியசாமியின் வழியில் கட்சித் தலைமை வழங்கும் அனைத்து பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். திமுக எதிர்க் கட்சியாக இருந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், பெரியசாமியின் மகளான கீதாஜீவன் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வருவதை பாராட்டி, அவரை “பெண் சிங்கம்” என புகழ்ந்ததாக கட்சியினர் நினைவுகூருகின்றனர்.



பின்னர் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் பெரியசாமி காலத்தில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கம் முன்பு நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தபோதும், கீதாஜீவனின் கட்சிப் பணியை பாராட்டியதாக கூறப்படுகிறது.



தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவல கங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம், கடல்சார் பயிற்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டதுடன், தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.



2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர் தூத்துக்குடி தொகுதியில் புதிதாக 13 நகர்நல அலுவலகங்கள், மின்சார ஏற்ற இறக்கத்தை சமாளிக்க 211 புதிய மின்மாற்றிகள், புதிய ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், சாலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரும் கீதாஜீவன் அரசியல் களத்திலிருந்து விலகவில்லை. தற்போது தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.



தேர்தல் வெற்றி–தோல்வியை கடந்து தொடர்ந்து மக்களுடன் பயணிப்பதே தனது அரசியல் பணியாக கொண்டு, திமுகவின் சார்பில் மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன்.