தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி தலைமை வகித்து, கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பாலசுந்தரம், பொருளாளர் எம்.ரமேஷ் விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கே.பி.ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், வெயில்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் சைமன், மைக்கேல், செல்வின், மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி, ஒன்றிய நிர்வாகிகள் சண்முக நாராயணன், மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.