முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், முத்தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு எட்டையாபுரம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு, மாநகராட்சி கணக்கு குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலருமான ஆர். ரெங்கசாமி தலைமையில், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சரத்பாலா, பால்துரை, கந்தன், அந்தோணி, முருகேசன், செல்வராஜ் கண்ணன், பூசாரி முருகன், ஜோசியர் முருகன், எஸ்.ஆர். கணேசன், முத்துராஜ், சேர்மத்துரை, ராஜாமணி, பாலு உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், கழக செயல்வீரர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.