புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்ய கூடாது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை (டூ) தூத்துக்குடி சாலை எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து.
ஆனால், புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் இன்று காலை முதல் வழக்கம் போல வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. டோல்கேட்டில் பாதுகாப்புக்காக இருக்கும் போலீசாரும் வசூல் செய்ய ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் டோல்கேட் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரிகளை டோல்கேட் முன்பு நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் டோல்கேட்டில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவினை மீறி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதை கண்டிப்பதோடு மட்டுமல்லாது மதுரை உயர்நீதிமன்ற உத்தரை புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடிகள் மீற வேண்டாம் எனவும் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கட்டணம் வசூல் செய்ய கூடாது - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது!!
அடுத்த
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் டோல் கேட் கட்டணம் வசூல் - என்ன சொல்கிறார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் அரி ராகவன்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026