தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) மற்றும் Centre for Eco-Feminine Excellence – Green Campus சார்பில் “மாபெரும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தின் தொடக்க விழா” கடந்த 7.9.2026 அன்று நடைபெற்றது.



சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை, பொறுப்பான கழிவு மேலாண்மை மற்றும் பசுமைப் பரப்பை அதிகரித்தல் குறித்த விழிப்புணர்வை மாணவர் களிடையே ஏற்படுத்தும் உயரிய நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக திருமதி எஸ். பிரியங்கா, ஐஏஎஸ் சிறப்புரையாற்றி, சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்வமுடன் இதில் பங்கேற்று பசுமைச் சூழலை உருவாக்கும் உறுதிமொழியை ஏற்றனர்.



கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி.சு. எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த விழாவை முனைவர் புலோமின் ரெஜி, முனைவர் எஸ். செல்வி, முனைவர் ஆர். ஸ்ரீப்ரியா மற்றும் முனைவர் எப். டயானா லோபோ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.