ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதன்வாழ்வு ஊராட்சி T. அய்யப்பபுரம் கிராம மக்கள் நீண்ட காலமாக மருதன்வாழ்வு கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்க, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க அய்யப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்பட்டது.
புதிய கடையை சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க செயலர் ராமலட்சுமி, ஊராட்சி செயலர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ், விற்பனையாளர் குட்டிராஜ், மகளிரணி உறுப்பினர்கள் பிரியா, நாகலட்சுமி, கிராமத்தலைவர்கள் காளியப்ப நாடார், முருகன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த புதிய ரேஷன் கடை தொடக்கத்தால், அய்யப்பபுரம் கிராம மக்கள் இனி தங்கள் கிராமத்திலேயே அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெறும் வசதி கிடைத்துள்ளது.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த அய்யப்பபுரம் புதிய ரேஷன் கடை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 109வது பிறந்தநாள் நினைவுநாள் விழா – தூத்துக்குடி பாஜக தலைமையகத்தில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026