தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 மற்றும் 2024 ம் ஆண்டு பெய்த கனமழையின் போது மாநகரபகுதியில் குடியிருப்புகளுக்குள் வௌ்ளம் புகுந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனா். 2023 ம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழைக்கு பிறகு எடுக்கப்பட்ட சில நடடிவக்கையினால் 2024 ம் ஆண்டு பாதிப்பு பாதியாக குறைந்தது. அதன் பின்பு புதிதாக பல்வேறு வடிகால்களை அமைத்து மழைநீரை கடலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
விரைவில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நிர்வாகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி தீவிரமாக களமிறங்கி மழை பாதிப்பை தடுக்கும் முன்னெச்சாிக்கை பணிகளை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக்கூடிய இபி காலனி முதல் துரைக்கனி நகர் வரையிலான ஓடையை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஓடை கல்லூாி நகா் வழியாக மாவட்ட தொழில் மையம் அருகில் பக்கிள் ஓடையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனையடுத்து இபி காலணி முதல் துரைக்கனி நகா் வரை நடைபெற்று வரும் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலா் சுரேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி இபி காலணி முதல் துரைக்கனி நகா் வரை கால்வாய் சீரமைப்பு பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் - அவரது தியாகத்தை போற்றி அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வீரவணக்கம்!!
அடுத்த
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026