காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 156வது மகாத்மா காந்தி ரத்ததான அறக்கட்டளை சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறுவர்களின் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக் கட்டளையின் தலைவர் எஸ்.எம். தாஸ் செய்திருந்தார்.



நிகழ்ச்சியில் காந்தி கொடியை கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் மற்றும் மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மருத்துவர் சீனிவாசன் ஜோதியை ஏற்றிவைத்தார். ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. பெருமாள்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



பேரணியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாராம், கோவில்பட்டி நகர தலைவர் அருண்பாண்டியன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜாசேகரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, முத்துவிஜயா, பழனிசாமி, மகேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பேரணி கோவில்பட்டி மார்க்கெட் வழியாக சென்று, காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறுவர்களின் சிலம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.