தூத்துக்குடி தமிழ் சாலை ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடையின் புதிய கிளை இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. சேலத்தில் தள்ளுவண்டியில் தொடங்கி இன்று உலக அளவில் பெயர் பெற்றிருக்கும் இந்த பிரபல உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழா பொதுமக்களின் பேராதரவில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் ஜீவன் ஜேக்கப், மகிழ் ஜீவன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெருமளவில் திரண்டுவந்து பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மக்கள் புதிய கிளையை உற்சாகத்துடன் வரவேற்று, முதல் நாளிலேயே ஆர்.ஆர். பிரியாணிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி புதிய கிளை திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் சாலை மேம்பாட்டு பணி துவக்கம் – பலர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்த மார்கண்டேயன் எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடியில் செய்தியாளர் தாக்குதல் சர்ச்சை: அதிக விலை வசூலை வெளிச்சம் போட்டதால் குண்டர்களின் கோபம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026