தூத்துக்குடி–திருநெல்வேலி பைபாஸ் சாலையில் செயல்படும் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை மீறி அதிகமாக வசூலித்தது குறித்து கேள்வி எழுப்பிய நியூஸ் எக்ஸ்பிரஸ் பதிப்பு மாவட்ட செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.
அதிக விலை வசூல் குறித்து விளக்கம் கேட்ட செய்தியாளரின் செல்போனும் கை கடிகாரமும் குண்டர்களால் பறிக்கப்பட்டதுடன், அவர்மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது ஊடக உலகை பெரும் சோகத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.
பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உடனடி தலையீடு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஊழலையும் சட்ட விரோதங்களையும் வெளிச்சம் பார்க்கச் செய்யும் பத்திரிக்கையாளர்களை துன்புறுத்துவது ஜனநாயகத்தையே தாக்குவது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குண்டர்களை உடனடியாக கைது செய்து, தேவையானால் குண்டர்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கமும் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது.
சம்பவம் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது காவல் துறை விரைவான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மாவட்டம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் செய்தியாளர் தாக்குதல் சர்ச்சை: அதிக விலை வசூலை வெளிச்சம் போட்டதால் குண்டர்களின் கோபம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி புதிய கிளை திறப்பு!!
அடுத்த
கார்த்திகை பவுர்ணமியில் ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா யாகம் — பக்தர்கள் தரிசனத்தில் பெருஉற்சாகம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026