அச்சம் அகற்றிய அண்ணல் டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியனாரின் 134-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடியில் சுயமரியாதை திருவிழாவாக கொண்டாடப் பட்டது.



தூத்துக்குடி மாவட்ட நாடார் மகாஜன சங்க செயலாளர் வி.வி.சதீஷ் தலைமை வகித்தார். தொடக்க நிகழ்ச்சியாக உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க இளைஞரணி மாநிலத் தலைவர் கிப்ட்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ராபின், சித்திரைவிஜயன், பிரதீப், அருணகிரிநாதன், மோசஸ், அருண்குமார், அருண்கௌதம், தர்மா, சசிகுமார், சங்கர் உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, நாடார் முன்னேற்ற பேரவை துணைத்தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் மகளிர் அணியினர் பழவகைகளை சீர்வரிசையாக வைத்து சவுந்திர பாண்டியனாருக்கு மரியாதை செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் சவுந்திரபாண்டியனார் சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி நாடார் மகமை செயலாளர் சேகர், துணைத்தலைவர் தேன்ராஜ், ரஜினி மன்ற துணைத்தலைவர் நாதன், திமுக சிறுபான்மை பிரிவு பாக்கியதுரை, இளைஞரணி சிவசுந்தர், கே.வி.கே. சாமி வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள், சிவந்தி ஆதித்தனார் மன்றம் சார்பில் ரவி, தெர்மல் ராஜா, நாடார் மகாஜன சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், பாலு, கணேசன், செல்வராஜ், பாண்டி உள்ளிட்டோர் மற்றும் உறவின்முறையினர் கலந்து கொண்டனர்.



விழாவின் நிறைவாக பாண்டியனார் தொழிற்சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வி.டி.சித்திரைவிஜயன் நன்றி கூறினார். தொடர்ந்து அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது.