தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியின் இணைந்த பணிக் கூட்டமைப்பில், மாணவர்கள் விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் நோக்கத்தில், ‘ஏனென்று கேள்’ எனும் தலைப்பில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாமானத நாளை மே 3ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரை, தூத்துக்குடி மாநகராட்சியின் அறிவியல் ஸ்டெம் பூங்கா (STEM Park) வளாகத்தில் நடைபெற உள்ளது.
மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் இதில் முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம். தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை, மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், வகுப்புகளும் செய்முறை பயிற்சிகளும் நடைபெற உள்ளன.
முகாமின் முதற்கட்டமாக, பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.
கணக்கும் இனிக்கும்
கைகளில் கண்ணாம் பூச்சி
அறிவியல் பரிசோதனைகள்
ஒரிகமி
கற்பனையும் கைத்திறனும்
பொம்மலாட்டம்
பலூனில் பொம்மைகள்
மந்திரமா தந்திரமா
அறிவியல் கோமாளி
அறிவியல் ஆனந்தம்
கதை சொல்வோம், கதை உருவாக்குவோம்
விளையாட்டை கற்போம்
நம்புவீர்களா?
மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும். அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுனர்களால் வழங்கப்படும். மாணவர்களில் “ஏன்?” என்ற கேள்வி எழும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.
வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரை காட்சி முறையில் திரையிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து Film Critics மாணவர்களிடம் படத்தின் அறிவியல் சார்ந்த உள்ளடக்கங்களை விளக்கி உரையாற்ற உள்ளனர்.
பெற்றோர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் அறிவியல் திறனையும், ஆர்வத்தையும் ஊக்குவிக்கச் செய்வது, அவர்களது எதிர்கால அறிவியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.
முன்பதிவிற்காக, கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது அறிவியல் பூங்கா (STEM Park) நேரில் சென்று பதிவு செய்யலாம் :- தொடர்பு எண் :- +91 95976 13988 / +91 82207 50082
என்று தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் ‘ஏனென்று கேள்’ கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை - திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு!!
அடுத்த
வெற்றி வாகை சூடிய வீராங்கனைகளுக்கு தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் மேட்ச் ஷூ வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026