தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் திருக்கோவில், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவானது நிகழும் மங்களகரமான 1201ம்ளு விசுவாவஸூ வருடம் ஆவணி 19மீ (04.09.2025) வியாழக்கிழமை உத்திராட நட்சத்திரமும், த்வாதசியும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதனத்தில் இன்று காலை (9 மணிக்கு மேல் 10 மணிக்குள்) துலா லக்னத்தில் விமான கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு "மகா கும்பாபிஷேகம்" சிவஸ்ரீ ரா. செல்வம் பட்டர் (எ) கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தூத்துக்குடி, ஆலய நிர்மான ஸ்தபதி ஆர்.ஆர். பாலகிருஷ்ணன் ஸ்தபதி & சன்ஸ் ஸ்ரீ கோமாதா சிற்பக் கலை கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற இருப்பதால் பக்த மெய்யன்பர்களும், ஆன்மீக செல்வர்களும் வருகை தந்து இம்மையிலும், மறுமையிலும் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கின்றோம். அதைத் தொடர்ந்து (04.09.2025) வியாழக்கிழமையான இன்று மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.
(02.09.2025) செவ்வாய் கிழமை தொடங்கி (03.09.2025) புதன் கிழமையான நேற்று வரை இரண்டு தினங்கள் ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், மற்றும் முதற்கால யாகசாலை பூஜை, அதைத்தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், புதன் கிழமையான நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
(04.09.2025) வியாழக்கிழமையான இன்று நான்காம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் "மகா கும்பாபிஷேகம்" நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மாபெரும் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார், ஸ்ரீ கருப்பசாமி அருள் பெற்று செல்லுமாறு விழா குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர்கள், காட்டு நாயக்கன்பட்டி வடக்கு தெரு, தெற்கு தெரு ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் திருக்கோவில், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக ஒரு நாள் மரக்கன்று நடும் விழா!!
அடுத்த
கனிமொழி கருணாநிதி எம்பி க்கு சண்முகையா எம்எல்ஏ வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026