தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக ஒரு நாள்  நிகழ்வாக மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுபடி தாளாளர் அனுமதியின் பேரில் தலைமையாசிரியர் சேசு அந்தோணி தலைமையில் பொறுப்பாசிரியர் ராஜ்குமார் மேற்பார்வையில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டது.    

தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.