ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் நிர்வாகிகளுடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அப்போது தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-
மரியாதைக்குரிய எம்.எல்.ஏ. சண்முகையா அவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த ஒருவார காலமாக முகநூல் தளங்களிலும், வாட்ஸ் அப் தளங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ச்சியாக பரப்பி வருகிறார்கள்.
தேவேந்திர வேளாளர் குலத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் சாதி பேதம் இல்லாமல் அனைவரும் நல்ல உதவிகளை செய்து வருகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறார்கள்.
எங்களது சமூகத்தின் அதாவது மூத்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் அமைச்சராகவோ, அல்லது உயர் பொறுப்பிற்கு வருவதற்கு வாய்ப்புள்ள சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமென்றே ஒரு அதிகாரத்திற்கு வரகூடாது என்று அதிகார சக்திகள் பின்புலத்தில் இருந்து சிலர் இதுபோல வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிலை கடத்தல் குற்றவாளிகளோடு தொடர்பில் இருக்கிறார் என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு கட்சியின் மூத்த தலைவர், தேவேந்திர குல வேளாளர் குலத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரை எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்புவது என்பது எங்கள் மக்கள் உண்மையில் வருத்தப்பட கூடிய சூழல் நிலவி வருகிறது.
தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சிக்கு மிகப்பெரும்பாலான வாக்குகள் செலுத்தி பாஜக அவர்களுக்குக் ஒரு பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம். ஆனால் இந்த மக்களுடைய பிரதிநிதியாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினரை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் முகநூல் பக்கத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
இந்த செய்தி என்பது ஆதாரம் அற்ற செய்தி தற்போது இந்த சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு படுத்தி அக்கிரி பரமசிவம் தனது முகநூல் பக்கத்தில் தவறான செய்திகளை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது குற்றவாளிகளிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு உண்மையான செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால் எந்த ஒரு குற்றவாளியும் அவருடைய பெயரை கூறாத பட்சத்தில் அவருடைய பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். கடந்த ஒரு வார காலமாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அந்த பகுதியைச் சார்ந்த பல்வேறு அமைப்புகள் தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்திருக்கிறார்கள்.
ஆனால் காவல்துறை புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது. காவல்துறையின் இந்த போக்கை தமிழர் விடுதலைக் களம் சார்பாகவும், தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக காவல்துறை வதந்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை தேவேந்திரகுல வேளாளர் மக்களை ஒன்று திரட்டி நடத்துவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பொதுவாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் அண்ணன் சண்முகையா அவர்கள் வளர்ந்து வரக்கூடிய தலைவராக இருக்கிறார். தற்போது அவர் சார்ந்து இருக்கக்கூடிய கட்சியில் மாவட்ட செயலாளராகவோ அமைச்சராகவோ வருவதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது அதோடு நாங்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இருக்கக்கூடிய அண்ணன் அவர்களுக்கு முக்கிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் செயல்பட்டு வரும் தருவாயில் அவர்களுக்கு இது போன்ற பதவிகள் கொடுத்து விடக்கூடாது அல்லது அவரை முன்னிலைப்படுத்த கூடாது என்ற நோக்கத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்குப் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., விற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட கூடாது என்று தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் - தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் பரப்பு குற்றச்சாட்டு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்தை இன்னும் 10 நாட்களில் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!
அடுத்த
ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த முத்துநகர் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வீரவணக்கம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026