தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில், டிரஸ்ட் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், டிரஸ்ட் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக சங்கத்தின் துணைத்தலைவர் நாகராஜ் பாபு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, சங்கத்தின் குரூப்பில் எந்தவிதமான மறுப்பு அல்லது விளக்கம் வழங்காதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. டிரஸ்ட் உறுப்பினராக இருந்தபடியே டிரஸ்ட் நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவது, டிரஸ்ட் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ராமசாமியிடம் விளக்கம் கேட்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் குறித்து நடைபெற்ற டிரஸ்ட் கூட்டம் இன்று (15.10.2025) மாலை தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க கட்டிடத்தில், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ரமேஷ் நாயுடு, ரெங்கசாமி நாயுடு, மோகன் நாயுடு, செல்லச்சாமி நாயுடு, ஜெயக்குமார் நாயுடு, ராஜா காந்தி நாயுடு, குப்புசாமி நாயுடு, வெங்கட கிருஷ்ண ராஜன் (அ) கண்ணன் நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவுகள், டிரஸ்ட் நிர்வாகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு – தலைவர் ராமசாமியிடம் விளக்கம் கேட்க தீர்மானம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“அறிவின் ஒளியால் இளைஞர் மனங்களை பிரகாசப்படுத்திய நாள் – அப்துல் கலாம் பிறந்தநாள் விழா உற்சாகமாக நடைபெற்றது!”
அடுத்த
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே பெஞ்சில் – பழைய நண்பர்கள் சேர்ந்து கொண்ட நெகிழ்ச்சி விழா!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026