தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் (NSS) சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்கள் மனதில் என்றும் வாழும் ‘இளையோரின் அறிவுத் தந்தை’ டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (15.10.2025) காலை சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் மற்றும் முதல்வர் ஜோஸ் சாஜி குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் Dr. இம்மானுவேல் ஜோசப் சிறப்புரை ஆற்றி, கலாம் அவர்களின் வாழ்க்கை இலக்குகள், கடின உழைப்பு, நாட்டுப்பற்றும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரின் எண்ணங்களையும் பற்றி ஊக்கமான உரையாற்றினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பிரிண்ட்லி அ. கோப் மற்றும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.

மாணவர்கள் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து நினைவுகூர்ந்து, அவரின் கனவுகளை நினைவுபடுத்தும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழா நிறைவில் அனைவரும் “கனவு காணுங்கள் – அதனை நனவாக்க பாடுபடுங்கள்” என்ற கலாம் அவர்களின் கருத்தை உறுதியாக எடுத்துரைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவு செய்தனர்.