தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “தூத்துக்குடியில் உள்ள ஆறு சபை மன்றங்களில் எங்கள் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு கவுன்சிலுக்கும் நான்கு பேர் தேர்வு செய்யப்படுவர். நாங்கள் ஆறு பேருடன் போட்டியிட்ட நிலையில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மொத்தம் 26 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முழுமையாக முறையான நடைமுறைகளின் கீழ் நடைபெற்றுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தேர்தலை நேர்மையாக நடத்தினார். அவர் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. எதிரணியினர் கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான முழுமையான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிரணியினர் தங்களுக்கு 70 சதவீதம் ஆதரவு இருப்பதாக பொய்பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தேர்தலில் கூட நிற்பதற்கு அவர்களிடம் போதிய ஆட்கள் இல்லை. அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும். நாங்கள் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.
வருகின்ற 30ஆம் தேதி லே செயலர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் எங்கள் அணியினர் முறையாக வெற்றி பெற்று தேர்வு செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டியில் கூறியதாவது: “எஸ்.டி.கே. ராஜன் அணி வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எஸ்.டி.கே. ராஜன் அவர்கள் செய்த தொண்டு பணியின் பயனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. எதிரணியினர் 70 சதவீதம் ஆதரவு இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் அவர்கள் செய்த ஊழல்களாலேயே தோல்வியடைந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரணியினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வந்தனர்” என்றார்.
இந்த பேட்டியின் போது ஜெபசந்திரன், மோகன், ஹென்றி ஞானராஜ், தேவராஜன், ஜான்சன், மாமல்லன், சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி பெரும்பான்மை வெற்றி – முன்னாள் லே செயலர் பேட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் எம்எல்ஏ G.V.மார்கண்டேயன் பங்கேற்பில் சைவ சித்தாந்த வகுப்பு நிறைவு விழா!!
அடுத்த
கண்ணா சில்க்ஸ் – சகா கலைக்குழு இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் சிறப்பு கலைவிழா கலை வழி மனித நேயம்… மக்களுடன் கொண்டாடப்பட்ட மகிழ்ச்சி கிறிஸ்துமஸ்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026