தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனையடுத்து தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வடக்கு மாவட்டத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறும் SIR பணி மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளை மதிப்பாய்வு செய்தார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் பின்னர் விடுபட்ட வாக்காளர்களை முழுமையாக சேர்க்கும் பணியே உண்மையான களப்பணியின் அடையாளம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் பெருமாள், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, இம்மானுவேல் உள்ளிட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முதல்வர் ஸ்டாலின் காணொலி ஆலோசனையில் தூத்துக்குடி பங்கேற்பு – அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் கூடல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பால்பாண்டி நகர் முதல் கோக்கூர் வரை – வடிகால் பணிகள் ஆய்வில் மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
விளாத்திகுளம் ஒன்றிய பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை – எம்.எல்.ஏ மார்கண்டேயன் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026