தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு வ.உ.சி. பேரவை சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்.