விளாத்திகுளம் – தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகி ராமசூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகி ராம் சூரத்குமார் 107-வது ஜெயந்தி விழா மரியாதையுடன் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு பக்தர்களுடன் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், சமூக ஆர்வலர் இளையராஜா, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேநாளில் கோவில்பட்டியில் நடைபெற்ற அ.லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குடும்பத்தின் இல்ல திருமண விழாவிலும் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்கள் தம்பதிகளை வாழ்த்தி ஆசீர்வதித்தார். உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் – ஜெயந்தி விழாவிலும் திருமண நிகழ்விலும் பங்கேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இருசக்கர வாகனத்தில் திடீர் சுற்றுப்பயணம் – மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு!!
அடுத்த
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026