தூத்துக்குடியில் "VinFast" விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காகவும், தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் நடைபெறும் "முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - தூத்துக்குடி" (INVESTMENT CONCLAVE 2025 THOOTHUKKUDI) தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவதற்காக,

தூத்துக்குடிக்கு வருகை தரும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சாலையோரங்களில் திமுக கழக கொடிகளை பரக்கவிட்டும், சுவர் விளம்பரங்கள், மற்றும் சுவரொட்டிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மாநகராட்சி 3 வது வார்டு சார்பில் கவுன்சிலர் ரெங்கசாமி ஏற்பாட்டில் முன்னனி நாளிதழில் முதல்வரை வரவேற்கும் விதமாக "கழகத் தலைவரே தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரே" வருக! வருக! என கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி விளம்பரம் செய்து அசத்தி சிறப்பு செய்துள்ளார்.