திருச்செந்தூர் உடன்குடியில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அண்ணாச்சி அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையேற்று உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கழகத்தின் துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உரையாற்றியபோது,
“மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கல்வி, சுகாதாரம், குடிநீர், வடிகால் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு சீராக வழங்கி வருகிறது. பெண்களுக்கு பல்வேறு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. மீண்டும் மு.க. ஸ்டாலினை ஆட்சி கட்டிலில் அமர வைக்க நாம் பாடுபட வேண்டும். தமிழகம் எப்போதும் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என வலியுறுத்தினார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உரையாற்றி, கூட்டத்தில் திரண்டிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்று உறுதிமொழி ஏற்றனர்.
தூத்துக்குடி
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” – உடன்குடியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பிளாஸ்டிக் இல்லா சமூகத்திற்காக தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பேரணி!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி இரவு வடிகால் பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026